சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு!
Friday, June 29th, 2018
சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் அமுலில் உள்ள விலைக்கமைய உள்ளூர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு அமைவாகவே சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் இராணுவம் வெளியேறிய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மாவட்ட அரச அதிபர் தெரிவி...
அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அர...
ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பபம் - கல்வி ...
|
|
|


