சமூக வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு தொடர்பில் ஆசிரிய சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்.–தவநாதன்

Thursday, April 27th, 2017

பாடநெறிகளை மட்டும் மாணவர்களுக்கு போதிப்பது மட்டுமன்றி அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் நிலைமற்றும் அதன் வளர்ச்சிக்கு ஆற்றவேண்டிய மாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும் பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் மூலமாகவே எமது சமூகம் ஏற்றமிகு வளர்ச்சியை எட்டமுடியுமென வடக்குமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னையகாலங்களில் யுத்தசூழல் காரணமாக வடக்குகிழக்குப் பகுதிகளில் என்ன நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்த அதேவேளை, அதிபர்களும் ஆசிரியர்களும் இவ்வாறான இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்தே கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு பாடசாலை விட்டு பிள்ளைகள் வீடுவந்து சேரும் வரையில் ஏக்கத்துடனும், அச்சத்துடனுமேயே வாழ்ந்து வந்தனர்.

ஆனால் இன்று அவ்வாறானதொரு சூழல் அல்லாது மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பாடசாலைகளும் இயல்பாக இயங்கிவருகின்றன. கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகளும் சுமுகமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில்,பாடசாலைகளில் பாடசாலைக் கல்வியைமட்டும் போதிக்காமல் மாணவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களிலிருந்து ஓரிடத்தில் கூடுகின்ற நிலையில் அவர்கள் சார்ந்துவாழும் சமூகத்தின் நிலைதொடர்பில் தெளிவுபடுத்தவேண்டிய அதேவேளை, அதன் வளர்ச்சிமற்றும் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் ஆற்றவேண்டிய பங்குபணிகள் தொடர்பாகவும் அதிபர்கள், ஆசிரியர்கள் தெளிவுபடுத்திஅவர்களுக்கு புரியவைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: