சமுர்த்தி பரீட்சை நடத்துவதில் சிக்கல்!

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும் குழுவினருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள...
சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - துற...
நற்பிரஜையை உருவாக்கும் நோக்கத்தில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவாக உள்ளது - விரிவுரையாளர...
|
|