சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் – பிரதமர் அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுதவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேசிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமூர்த்தி வங்கிகள் ஊடாக பயனாளிகளுக்கு கணக்கைத் திறந்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் அந்தக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்க வேண்டியதன் காரணமாக அரசாங்க திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிப்பதுடன், சமூக நல நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரையாண்டு காலத்தில் 1000 முறைப்பாடுகள் !
நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீன வெளிவ...
தொடர் காச்சல் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
|
|