சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!
Tuesday, June 12th, 2018
சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி கூடுதல் கடன் தொகையை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
அனைத்து சமுர்த்தி வங்கிகளிலும் தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்றிணைத்து வைப்பீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான முகாமைத்துவத்தின் கீழ் வைப்பீட்டாளர்கள் வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்ததனால், 2016ம் ஆண்டிலும் பார்க்க 2017ம் ஆண்டு சமுர்த்தி வங்கியின் வருமானம் அதிகரித்திருப்பதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே கூறினார்.
Related posts:
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ஒருவருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு - சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்ப...
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...
|
|
|


