கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ஒருவருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
Wednesday, October 21st, 2020
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்பின் அவர் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விபத்துக்களை குறைக்க வருகின்றது நான்கு சக்கரங்களைக் கொண்ட புதிய வாகனம் !
ஆங்கில தின போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது திண்டாடிய மாணவர்கள் - தீவக கல்வி வலயத்தில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது - செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத...
|
|
|


