சமாதானப்பேரவை தேசிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் விரைவாக வழங்காவிடத்து, மக்களது ஆதரவை அரசாங்கம் இழக்க நேரும்என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
தேசிய சமாதானப்பேரவை இதனைத் தெரிவித்துள்ளதுநீண்டகாலமாக முரண்பட்டிருந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கி இருக்கின்றன. இதனால் பல்வேறு விடயங்களில் இணக்கமற்றத்தன்மை நிலவுகின்றன. இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் விரைவாக தீர்வுகளை முன்வைக்க முடியாது உள்ளது
பொருளாதார ரீதியாகவும், தொழில்வாய்ப்பு உருவாக்கம் போன்ற விடயங்கள், மறுசீரமைப்பு, காணி விடுவிப்பு போன்ற தமிழ் மக்கள் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் மந்த நிலையில் இருக்கின்றனஇது அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!
முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது - சிரேஷ்ட பொலிஸ்...
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!
|
|