சதி முயற்சிகளை முறியடிப்பேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரை!

மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் –
“ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி, ஒரு குடும்பமாக இயங்குகின்றது. குடும்பம் என்றால் அதற்குள் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலத்தை அறியாமல் சிலர் செயற்படுகின்றனர். எமது கூட்டணி அரசை எவராலும் பிளவுபடுத்த முடியாது” என்றும’ அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் - பவ்ரல்!
பாடசாலை அதிபா்கள் தொடர்பில் முக்கிய பணிப்புரை விடுத்துள்ள வடக்கின் ஆளுநர்!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு! - சம்பிரதாய முறைகளைவிட மருத்துவ ஆலோசனைகளுக...
|
|