இனவாத மதவாத ரீதியில் பிரசாரம் செய்ய முடியாது – கபே அமைப்பு!
Sunday, January 14th, 2018
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் இனவாத, மதவாத ரீதியிலான பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதெனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.
இனவாத, மதவாத ரீதியிலான பிரசாரங்களும் இந்தத் தேர்தலில் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பான முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்துள்ளன. அதில் சிவசேனை என்ற இந்து அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்று கோரியுள்ளது
அதேபோன்று தென்னிலங்கையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் அமைப்பு புதிய அரசமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாமென்று மக்களைக் கோரியுள்ளது.
ஆனால் யாருமே மத, இன ரீதியிலான பிரசாரங்களில் ஈடுபட முடியாது. புதிய தேர்தல் முறைமையின் ஊடாக மத, இன ரீதியாகச் செயற்பட முடியாது என்பதுடன், அபிவிருத்தி நோக்கியே செயற்பட வேண்டும் என்றார்.
Related posts:
உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி !
கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு - வைப்பி...
எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் - மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


