சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
Wednesday, March 8th, 2017
யாழ். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கலைஞர்கள் தங்களுடைய விபரங்கள் மற்றும் கலைத்துறை சார்ந்த விடயங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர் விபரத் திரட்டு நூல் வெளியீடு செய்யப்படவுள்ளமையினால் கலைஞர்களின் விபரங்கள் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரால் திரட்டப்பட்டு வருகின்றன.
எனவே, கலைஞர்கள் தமது விபரங்களை இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னதாக கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், வலி.தென்மேற்கு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.
Related posts:
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி அறிவிப்பு!
சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!
அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்!
|
|
|


