தேசிய பாடசாலைகளை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Friday, December 13th, 2019


நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பாடசாலைகளை இனங்காண்பதற்காக தொழிநுட்ப குழு ஒன்றை நிருவி உள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள வசதி குறைந்த 3 பாடசாலைகள் வீதம் அபிவிருத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பின்னர் அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்துவதன் மூலம் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு பகுதிகளிலும் மும்மொழிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்கவும் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் இவ்வாறான 20 பாடசாலைகளை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts: