சட்டவிரோத மண் கடத்தல்: தமிழ் தேசிய முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கைது!

Wednesday, December 18th, 2019

சட்டவிரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்ட யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் மணல் ஏற்றிச் செல்வதற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் தொடர்புலான தளர்வு நிலையை தொடர்ந்து பொலிசாரின் தலையீடு குறைந்ததால் யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் கடத்தும் கும்பலின் கை ஓங்கியிருந்த நிலையில் பல இடங்களிலும் மணல் கொள்ளை வகைதொகையின்றி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலை பொதுமக்கள் தமது காணிகளில் சிலர் அடாத்க்தாக மணலை அபகரித்து செல்வதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலும் பொலிசார் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருந்துவந்தனர்.

இதனையடுத்து மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்து பல இடங்களிலும் வழிமறிப்பு செய்தனர்.

அதுமட்டுமல்லாது வேலணை மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் மக்கள் எரியூட்டியிருந்தனர்.

ஆனாலும் மணல் கொள்ளையர்களின் கைவண்ணம் தொடர்ந்தவண்ணம் இருந்தது.

குறிப்பாக அரியாலை பூம்புகார் பகுதியில் தனியார் காணிகளில் வகை தொகையின்றி மணல் அகழப்பட்டு வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதை கட்டுப்படுத்த கோரி மக்கள் பலதரப்பட்டவர்களிடம் முறையிட்டு பலன் தராத நிலையில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடில்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்த பகுதியில் கைகலப்பிலும் முடிந்தது.

இன்னிலையில் அரியாளை பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் பொலிசாரால் சில மணல் கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு பெருந்தொகை தண்டப்பணம் உள்ளிட்ட தண்டனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் தொடர்ச்சியாக தொடர்ந்தும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பூம்புகார் பகுதியில் கடந்த இரு தினங்களாக ம்ணல் கொள்ளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மணல் கொள்ளையர்களின் வாகனங்கள் பல கைப்பற்றியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்பிடையில் குறித்த மாநகரசபை உறுப்பினர் கிருபாகரன் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று மாலை கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே தமிழ் தெசிய முன்னணியினர் இன்று யாழ்ப்பாண நகரில் குறித்த மணல் கடத்தலுக்கு எதிராகா போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: