சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !
Thursday, April 8th, 2021
சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 04 பெண்களும் 14 ஆண்களும் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயது சிறுவனும் அடங்குவதாகவும் 04 முச்சக்கர வண்டிகளில் இவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது!
வடக்கின் அபிவிருத்திக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் - ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிட...
|
|
|


