சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!
Tuesday, November 20th, 2018
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆபரண தொகையுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் தமது ஆடையில் மிகவும் சூட்சுமமாக தங்க ஆபரணங்களை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் - விவசாயத் திணைக்களம் வழங்கியது!
பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் - யாழ். அரச அதிபர் அறிவிப்பு!
|
|
|


