சட்டத்திற்கு அமைவாக அனைவரும் செயற்படவேண்டும் – ஜனாதிபதி!

Friday, December 2nd, 2016

வீதி பாதுகாப்புக்கான தேசிய வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களினதும், தரப்புக்களினதும் பொறுப்பும் கடமையுமாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைவரும் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவது நாட்டின் எதிர்காலப் பயணத்திற்கு முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்லும்போது பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை பாதுகாப்பது தார்மீகமானதாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ‘நடத்தும் கவனமாக சென்று வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந.த விடயத்தை குறிப்பிட்டார். நேற்று இந்த நிகழ்வு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது

பொதுப் போக்குவரத்துத் துறையில் முன்னேற்றமில்லை. இந்த நிலை அபிவிருத்திக்கு முக்கிய சவாலாகும். வீதி விபத்துக்களினால் நாளாந்தம் 9 பேர் உயிரிழக்கிறார்கள். வீதி விபத்துக்களினால் நாளாந்தம் 25ற்கும் 30க்கும் இடைப்பட்டோர் அங்கவீனமடைகின்றனர். விபத்துக்களுக்காக பிரதான காரணம் மதுபாவனையாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

தார்மீக சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கத்தை சாரும் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் கூடுதலான வாகனங்களை பயன்படுத்தி பயணிக்க வேண்டிய தேவையும் கிடையாது என்றும் கூறினார்.

சில சந்தர்ப்பங்களில் பல வாகனங்களுடன் பயணிப்பவர்கள் யார் என்பது பற்றி எவருக்கும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறாக பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, அதில் யார் பயணிக்கின்றார்கள் என்பது பற்றி தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறினார். இந்த வேலைத் திட்டம் நேற்றுமுதல் அமுலாகிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

110c33efff19173504a2a212cb90bfc3_XL

Related posts: