சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிடின் அது குற்றம் – சீ.ஆர்.டி சில்வா

சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிட்டால் அது ஓர் குற்றமாகும் என கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சமூகத்தை வரி செலுத்துவதற்கு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் உள்ளிட்ட சட்டத்தரணிகள் தற்பொழுது வரி செலுத்தி வருகின்றோம்.
வருமான விபரங்களை பேணி வரி செலுத்துவது குறித்து சட்டத்தரணிகளை தெளிவுபடுத்த உள்ளோம். சட்ட சேவை பெற்றுக் கொள்ளும் சேவை பெறுனர் பற்றுச்சீட்டு கேட்டால் அதனை வழங்கவேண்டியது சட்டத்தரணியின் கடமையாகும். அவ்வாறு வழங்க மறுப்பது பிழையானது.
மேலும் பற்றுச்சீட்டு வழங்காத சட்டத்தரணிகள் குறித்து சட்டத் தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட முடியும். அவ்வாறான சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத்தயார் என சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|