பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன!

Wednesday, January 29th, 2020

நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால்  மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் பிரகாரம் நேற்றையதினம்(28) வவுனியா மாவட்டத்தின் காத்தார் சின்னகுளம், பெரியார் குளம், கருப்பனிச்சான் குளம், அலபத்த குளம், அழகர் சமளங் குளம் ஆகிய குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதான நடைமுறைப்படுத்தப்படடும் இந்த திட்டத்தினூடாக விடப்படும் மீன்கள் எதிர்வரும் மே  மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படகின்றது.

குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜிவன் உள்ளிட்ட பல கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: