ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்படுத்தலாம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன !

Friday, March 26th, 2021

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பை அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

“ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்த அதிகமான நிதி செலவழிக்கப்படவுள்ளது. அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக செலவழிக்கப்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை பாரிய நிதி நெருக்கடியில் இருக்கும்போது மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களைச் செலவழித்து பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது.

அந்தவகையில் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். குடா நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணிக்கவும், யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பகுதிகளுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றவும் இலங்கை மீது ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: