மாணவர்களை நல்வழிப்படுத்த அறநெறி வகுப்புகள் அவசியம் – ஈ.பி.டிபியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Monday, September 24th, 2018

மாணவர்களை நல்வழிப்படுத்த சமய நெறிபடுத்தல் அமைப்புகள் காத்திரமான முறையில் செயற்படுத்துவது அவசியம் அறநெறி வகுப்புகளின் மாணவர்களின் செயற்பாட்டை அதிகரிக்க சமய நிறுவனங்கள் அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் ஞாயிறு தினங்களில் மாணவர்களை தனியார் கல்வி நிலையங்களில் இருந்து விடுவிப்பது தொடர்பில் வட மாகணசபை எடுத்த முடிவுகளும் வெற்றியளிக்காது போய்விட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலரும் வடமாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் தெரிவித்தார்

கிளிநொச்சி திருநெறி கழகத்தால் நாடத்த பட்ட சைவநெறி பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வரும் குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

மாணவர்களை நல்வளிபடுத்துவதில் பாடசாலை சமூகம் பெற்றோர்கள் போன்றோரை விடவும் இவ்வாறன சமய நிறுவனங்கள் பல அம்சங்களை போத்திக்கிறது எனவே அறநெறி வகுப்புகளில் மாணவர்கள் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு பெற்றோர்களும் ஒத்தாசையாக இருக்க வேண்டும் அறிவியல் கல்வியோடு ஆன்மிக கல்வியையும் வாழ்வையும் வளப்படுத்துவதற்கு சிறந்த வழிமுறை என்பதை உணர்த்து செயற்பட வேண்டும் எனவும் மாகணசபை உறுப்பினர் வை தவநாதன் அவர்கள் மேலும் தெரிவித்தார்

தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசிகளையும் சான்றிதல்களையும் வை தவநாதன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

unnamed unnamed (1)

Related posts: