சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் – அனுதாப செய்தியில் டக்ளஸ் தேவானந்தா !
Tuesday, February 14th, 2017
சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் முக்கியமானவராக திகழ்கின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற அமரர் குமாரசாமி சண்முகரத்தினத்திற்கான அனுதாபச் செய்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமத கட்சி சார்ந்த செயற்பாடுகளில் நீண்டகாலமாக உழைத்தது மட்டுமின்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் அயராது பாடுபட்டவர் மட்டுமின்றி சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்காகவும் பங்களிப்பை நல்கியவர்களில் அமரர் குமாரசாமி சண்முகரத்தினம் முக்கியமாக திகழ்கின்றார்.
அதுமட்டுமன்றி இப்போது மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்ததுடன் அதற்கான தீர்வுகள் பலவற்றையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த வகையில் அன்னாரது இழப்பு எமது கட்சிக்கும் இந்தப் பட்டின சபைக்கும் மட்டுமன்றி அன்னார் சார்ந்த அனைவருக்கும் நண்பர்களுக்கும் பாரிய இழப்பாகும் என்பதை நான் நன்கரிவேன். எனத் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முன்பதாக சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம்(14) சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்மலை அணிவித்தும் அலர் வளையம் சாத்தியும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இதன்போது யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளரும் வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாகச் செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன், யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பத்குணராஜா ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் நடைபெறுகின்றன.




Related posts:
|
|
|


