சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்!
Monday, August 8th, 2016
சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(08) முற்பகல்-10.30 மணி முதல் யாழ். பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிபந்தனையற்ற வகையில் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய், பயங்கர வாதத் தடைச் சட்டத்தை உடனே நீக்க வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளுடன் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. சுமார் ஒரு மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
Related posts:
அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது - பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!
சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் - எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர த...
வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!
|
|
|


