சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Monday, July 29th, 2024

வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை விஜயதாச ராஜபக்ஷ விகித்து வந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில் இந்த பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: