கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!
Tuesday, January 19th, 2021
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடியது.
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
முன்பதாக 4 நாடகளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த உள்ளிட்டோர், நாடாளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிரை பறிக்கும் இயர்போன்கள் : 6 மாதங்களில் 224 பேர் உயிரிழப்பு!
கல்வி முறையில் மாற்ற வேண்டும் - கல்வி அமைச்சர்!
2025 வரையில் தேசிய அரசாங்கத்தின் பயணம் தொடரும்!
|
|
|


