கோலாலம்பூரில் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
Monday, September 5th, 2016
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் மலேசியாவின் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உயர்ஸ்தானிகரை தாக்கிய குழு தொடர்பில் தற்போது பொலிஸார் கவனம் செலுத்திவருவதாக மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் Tan Sri Khalid Abu Bakar தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஷவின் எதிர்பாளர்களால் மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நேற்றைய தினம் தாக்கப்பட்டார்.மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில்இலங்கையின் அரசாங்கம் நேற்றைய தினம் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து இந்தியாவுக்கான சேவை ஆரம்பம்!
உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு - கல்வி அமைச்சர் ஜி...
|
|
|


