கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயம்!

ஹட்டன் – டயகம வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் – டயகம வீதியில் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் பயணித்த 49 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 24 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வழமைக்கு திரும்பியது திணைக்களத்தின் சேவைகள் - மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் காலமானார்...
|
|