கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்பு!
Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள இலங்கை!
ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!
அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுத...
|
|
|


