கோப்பாய்ப் பொலிஸார் இருவர் மீது கொக்குவில் பகுதியில் தாக்குதல்: மேலும் இருவர் கைது !
Thursday, August 3rd, 2017
யாழ்.கோப்பாய்ப் பொலிஸார் இருவர் மீது கொக்குவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களைக் கோப்பாய்ப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை(03) கைது செய்துள்ளனர்.
நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து என அழைக்கப்படும் யோகராஜா சதீஸ் (வயது-18) மற்றும் அருள்சீலன் பெட்ரிக் தினேஷ் (வயது- 18) ஆகிய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விரு வரும் எதிர்வரும் ஆகஸ்ட்- 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கொக்குவில் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான இரு பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !
வர்த்தக சங்கத்திற்கு பிரதமர் காரியாலயம் கடிதம்!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...
|
|
|


