பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்!
Tuesday, July 4th, 2017
உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய Petya இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணினிகளின் செயற்பாட்டை முடக்கும் புதிய வகை Ransomware இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயற்பட வைக்க பிணைத்தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயற்படச் செய்ய பிணைத்தொகை கோரும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் நோக்கம் என
யூரோபோலின் சைபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஜேக் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
Related posts:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு!
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் - சுகாதார அமைச்சு எ...
அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் - துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சும...
|
|
|


