கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்!
Saturday, August 5th, 2017
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மா விலை இன்னும் குறைக்கப்படவில்லை. மாவின் விலை குறைக்கப்படும் வரையிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பண்டங்களின் விலைகளைக் குறைக்கமுடியாது” என்று, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
“மாவின் விலையைக் குறைத்த உடனேயே, அதற்குச் சமாந்தரமாக பாண் உள்ளிட்ட சகல வகையான, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் குறைப்போம்” என்று, அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான செஸ்வரி, 25 ரூபாவிலிருந்து 15 ரூபாய் வரையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை (01) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
Related posts:
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூ...
நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் - நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப...
|
|
|


