நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, August 24th, 2021

நீதிமன்றத்தில் ஆஜராகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான நபர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலான கட்டளைகளை அநாவசியமான முறையில் பிறப்பிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு சுற்றுநிரூபத்தினூடாக நீதிபதிகளுக்கு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையின் கீழ், நீதிமன்ற செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய வழக்குகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுவதாகவும், ஏனைய வழக்குகள் அறிவித்தல்களினூடாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம், நீதிமன்ற வரையறைக்குட்பட்டு பணியாளர்களை சேவைக்கு அழைக்குமாறும் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: