கொழும்பு பேருந்து சேவை வடமராட்சி கிழக்கு ஊடாக ஆரம்பமானது…!

வடமராட்சி கிழக்கு ஊடாக பருத்தித்துறை – கொழும்பு பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையை ஆரம்பிக்கும் முகமாக செம்பியன்பற்றில் சம்பிருதாயபூர்வமான நிகழ்வொன்று பருத்தித்துறைச் சாலை ஓய்வுபெற்ற உதவிமுகைமையாளர் வினாசித்தம்பி சோமசுந்தரம் தலைமையில் செம்பியன்பற்றில் இடம்பெற்றது.
பருத்தித்துறையில் இருந்து நேற்றுமுன்தினம் (16) இரவு 07.00மணிக்கு சிறப்பு நிகழ்வகளுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டு புறப்பட்ட பேருந்து மந்திகை, நெல்லியடி, கோயிற்சந்தை, கலிகை, குடவத்தை ஊடாககுடத்தனை, அம்பன், நாகர்கோவில், செம்பியன்பற்று,மருதங்கேணி சந்தி வழியாக மாசார், புதுக்காட்டுச் சந்தி அடைந்து அங்கிருந்து கொழும்புக்கு சேவையைத் தொடர்ந்தது.
இந்நிகழ்விற்கு பருத்தித்துறை சாலைமுகாமையாளர் சி.கந்தசாமி அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு, இச்சேவை தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் பருத்தித்துறை சாலைக்கு சாரதிகள் நடத்துனர்கள் இல்லாத பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக பருத்தித்துறைச் சாலை உதவிமுகாமையாளர் திருசிவச்செல்வநாதன் அவர்களும் கௌரவவிருந்தினராக பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் ஓய்வு பெற்றசாலைச் சாரதிசிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்களும் செம்பியன்பற்று தெற்கு கிராம முன்னேற்றச் சங்க தலைவரும் சமாதான நீதிவானுமாகிய பொன்னையா தங்கராசா அவர்களும் வடமராட்சிகிழக்கு பல நோக்குக் கூட்டுறச் சங்க உபதலைவர் திரு திரவியநாதன் அவர்களும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|