கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு : ஒருவர் படுகாயம்!
Friday, February 16th, 2018
கொழும்பு புறக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாகவும் இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 39 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் இந்த துப்பாக்கப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்துள்ள சந்தேகநபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கைக்கு இம்மாத இறுதியில் வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்!
இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா - 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள...
எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படவில்லை - வதந்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பதில்!
|
|
|
வீட்டுப்பாவனை மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு தெரிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை இலங்கை பூர்த்தி செய்யுமானால் ...


