கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படை வசமே இருக்கும்  – இலங்கை கடற்படை!

Wednesday, February 1st, 2017

சீனாவின் முதலீட்டுன் அமைக்கப்பட்டுவரும் கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படை வசமே இருக்கும் என்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உத்தியோகபூர்வ விஐத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி , புதுடெல்லியில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். கடற்படைத் தளபதியிடம், சீன நீர்மூழ்கிகள், கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பிய போது பதிலளித்த கடற்படைத் தளபதி, இலங்கையின் தரையிலோ, அதனைச் சுற்றியுள்ள கடலிலோ இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் முற்றிலும் பொருளாதாரத்துடன் சம்பந்ப்பட்டது விடயமாம் என்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன கூறினார்.

portcity

Related posts: