கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, January 12th, 2022

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் ஆயிரத்து 320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 23 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், 2035 ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: