கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் – அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது – அமைச்சர் வாசுதேவ!

Thursday, February 4th, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

பிற நாடுகளின் அதிகார போட்டின்னத்மைக்கு இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தையும் தேசிய வளங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

எமது நாட்டில் உள்ள தேசிய வளங்களை இலங்கை மக்கள் மாத்திரமே உரிமை கொண்டாட முடியும். தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். 10 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தினால் அரசாங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: