கொழும்பில் மீண்டும் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து – ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவிப்பு!
 Thursday, June 4th, 2020
        
                    Thursday, June 4th, 2020
            
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு அருகிலுள்ள 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்ட குறித்த அதிகாரி வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் அவரது மனைவி மற்றும் ஒரு பிள்ளைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் பிள்ளைகள் இருவர் அருகில் உள்ள இரண்டு வீடுகளின் பிள்ளைகளுடன் நீண்ட காலமாக விளையாட செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் விமான நிலையத்தில் சேவை செய்து வீட்டிற்கு வந்த நாள்முதல் அந்த சிறுவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று விளையாடவில்லை என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் கொரோனா கொத்து ஏற்படும் ஆபத்தை கருத்திற் கொண்டு இந்த இரண்டு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் கணப்படாத நிலையில், கடந்த வாரம் குறித்த இராணுவ கேர்னல் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        