யாழ் போதனா வைத்தியசாலையில் 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள்!

Thursday, October 26th, 2017

யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய போதுமான வசதி இல்லாமையால் 2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர வைத்திய பிரிவில் 2-ம் கட்டத்தின் கீழ் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொறியியல் பணி தொடர்பில் மத்திய ஆலோசனை பிரிவினால் தற்போது இந்த பணிகள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கமைவாக  2-ம் கட்டத்திலான  நிர்மாணப்பணிகளை திட்டமிட்டு செயற்படுத்தல (Design & build  ) அடிப்படையில் 1359.35 மில்லியன் ரூபாய் வரியுடனான தொகைக்கு பொறியியல் பணி தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகம்(CECB) மற்றும் சென்ட்ரல் இன்ஜினியரின் செர்விஸ் தனியார் கம்பனி (CESL) என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: