கொழும்பின் சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
Monday, May 9th, 2022
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
இதனிடையே காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
இந்தியத் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை வடபகுதி வாழ்கின்ற மீனவர்களை அதிகம் பாதிக்கும்!
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிறப்புக் கவனம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
|
|
|


