கொழுப்பு உணவுகள் குறித்தும் வருகிறது சட்டம்!
 Friday, August 19th, 2016
        
                    Friday, August 19th, 2016
            
உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மென்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை காட்டும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிற அடையாளங்களின் ஊடாக மென் பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அடையாளப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய உப்பு மற்றும் கொழுப்பு வகைகள் உணவில் எந்தளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை காண்பிக்கக்கூடிய வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உருளைக் கிழங்கு பெரியல், பீட்சா, சிற்றுண்டிகள், பிஸ்கட்கள் போன்றவற்றில் நுகர்வதற்கு ஒவ்வாத அளவில் உப்பு மற்றும் கொழுப்பு அடங்கியிருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. உணவு வகைகளில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவு பற்றி குறிப்பிடப்படுவதனால் நுகர்வோருக்கும் இது குறித்து தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        