2017ஆம் ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி நடவடிக்கை

Tuesday, September 5th, 2017

இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 8ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இராணுவ மின்னேரியா காலாற்படை பயிற்சி முகாமில் 69 வெளிநாட்டு இராணுவத்தினரது பங்களிப்புடன் குறித்த பயிற்சி நேற்று ஆரம்பமானது. இந்த பயிற்சி எதிர்வரும் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்போது பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த பயற்சி நடவடிக்கைகளில் முழுமையாக 2675 பேர் பங்கேற்பதுடன், வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரும், இலங்கை இராணுவத்தின் காலாட்படையினர்,கொமாண்டோ மற்றும் விஷேட படையினரும் ,இலங்கை கடற்படை,விமானப் படையினரும் பங்கேற்பர்.

கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர,பிரிகேடியர் நிஷாந்த ஹேரத்,பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா,பிரிகேடியர் உதித பண்டார,கேர்ணல் சந்திர ஜயவீர,கேரணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமை...
500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் - எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபி...