கொலன்னாவ எரிபொருள் தாங்கிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

Friday, September 4th, 2020

கொலன்னாவ எரிபொருள் களஞ்சியப்படுத்தல் தாங்கிகள் மூன்றை மீளப்புனரமைப்புச் செய்வதற்கும் அதன் செயற்பாட்டின் வினைத்திறனை உறுதிசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொலன்னாவ எரிபொருள் களஞ்சியப்படுத்தல் தாங்கிகள் மூன்றை மீள நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் சக்திவலு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கான கொந்தராத்து பொறுப்பு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட மீள்நிர்மாணக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக இந்தோ ௲ ஈஸ்ட் என்ஜினியரிங் அன்ட் கன்ஸ்ரக்ஷன் (லங்கா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்வசம் 942.47 மில்லியன் ரூபாவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் அனல்மின்நிலையத்திற்காக விரைவு கொள்வனவின் கீழ் 300,000 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 16.18 மில்லியன் டொலர்களுக்குக் கொள்வனவு முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Related posts: