கொரோனா வைரஸ் தாக்கம்: பீதியை ஏற்படுத்தவேண்டாம் – கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, January 29th, 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்தவேண்டாம் என்று வணக்கத்துக்குரிய இத்தபானே தம்மலங்காரல தேரரும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இந்த தொற்றை தடுக்கக்கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தேவையேற்படின் பொது நிகழ்வுகளை பிற்போடமுடியும்.

அதேநேரம் பாடசாலைகளை மூடிவிடவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாமவர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து இது தொடர்பில் தெளிவூட்டல்கள் நடத்தப்படவேண்டும் என்று தேரர் கோரியுள்ளார்

அதேநேரம் தேவையேற்படின் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் வீட்டில் தயாரித்த உணவுகளை பாடசாலைகளுக்கு செல்லும் தமது பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும்.

இதேவேளை இந்த கொரோனா வைரஸை காரணம் காட்டி சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் மனங்களின் தோற்றுவித்து விடக்கூடாது என்றும் கர்தினால் கேட்டுக்கொண்டார்

Related posts: