கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
Tuesday, March 24th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 311 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
பொலநறுவை கந்தக்காடு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து 108 பேருக்கும், மட்டக்களப்பு புணானி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 203 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்து 311 பேரும் இன்று பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கண்டி, மாத்தறை, காலி ஆகிய மாவடங்களை சேர்ந்தவர்கள் இன்று எட்டு பேருந்துகளில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானனோர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்
விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!
சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ ந...
|
|
|


