கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்றுங்கள் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தீவக மக்களிடம் கோரிக்கை!

தற்போது வேலணை பிரதேச மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா நோயின் ஆபத்தை உணர்ந்து வேலணை பிரதேச மக்கள் மட்டுமல்லாது தீவக மக்கள் கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை முறைப்படி பின்பற்றி குறித்த உயிர்கொல்லி தொற்றிலிருந்து உங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எமது செய்திப் பிரிவுக்கு மேலும் தெரிவிக்கையில் – மினுவாங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்களூடாக தற்போது நாடு முழுவதும் கொரோன தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவ வாய்ப்புபுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் ஒரு யுவதி அடையாளர் காணப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வேலணை பிரதேசத்திலும் சுகாதர தரப்பினரால் 57 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்
இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாத வகையில் அரசாங்கத்தால் பல்வேறு பாதுகாப்பு முன்நடவடிக்கைகளும் அதற்கான வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் எமது பிரதேசத்தின் சுகாதார தரப்பினரும் அதற்கான முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சுகாதார விழிப்புணர்வகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நோயை கட்டப்படுதர்துவதறந்கு பொதுமக்களாகிய உங்கள் ஒவ்வொருவர ஒத்துழைப்பே மிகவும் அவசியமானதாக உள்ளது.
அந்தவகையில் மக்கள் அச்சத்தை விடுத்து தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பேணி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்நோய் தொற்றை எமது பகுதியிலிருந்து இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|