கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வு!
Tuesday, June 2nd, 2020
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடமன் குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்..இதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!
வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடிக்கப்படும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் அறிவிப்...
அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


