இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!

Monday, March 27th, 2017

வாடகை அடிப்படையில் ஏ 330 – 200 ரக விமானங்களை, ஶ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு வழங்கிய இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று  இலண்டன் மேல் நீதிமன்றத்தில் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இங்கிலாந்தின் விமான நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப நாளாந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, விமானங்களை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை இரத்து செய்யும் முயற்சியே இதற்கு காரணம் என சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

S.A.S.O.F 2 ஏபியேஷன் அயர்லண்ட் லிமிட்டெட் எனப்படும் இந்த நிறுவனம் ஶ்ரீலங்கன் விமான நிலையத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும் கூலி மற்றும் குறித்த பணத்தை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இங்கிலாந்தின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என இந்த மனுவின் மூலம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களை கொண்டுவருவதற்கான உடன்படிக்கை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் காலாவதியாகியுள்ளதுடன் ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி சுரேன் ரத்வத்த இந்த ஒப்பந்தத்தின் காலத்தை நீடித்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையுடன் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை வெற்றியடைந்தால் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் பணிப்பாளர் சபை தீர்மானித்திருந்த, பின்புலத்திலேயே பிரதான நிறைவேற்றதிகாரி இவ்வாறு செயற்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை வெற்றியளிக்காத நிலையில் S.A.S.O.F 2 ஏபியேஷன் அயர்லண்ட் லிமிட்டட் நிறுவத்திற்கு இந்த காலத்தை நீடிப்பதை கருத்தில் கொள்ளாமல் குறித்த விமானங்களை மீண்டும் அந்த நிறுவனத்திற்கு வழங்குவதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அனுப்பிய அந்த கடிதத்தை நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்தினால் அது ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts: