கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – எதிர்வரும் திங்கள்முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவிப்பு!

நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்களன்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில் –
மேல் மாகாணத்தில் கொரோனா பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி இதனடிப்படையில் மேல்மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நீக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். கவனமாக இருந்தால் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ள இராணுவத்தளபதி இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாட்டை முழுவதுமாக மூட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கொரோனா அலை எவ்வாறு வந்தது என்பது குறித்து தனக்கு சில தகவல்கள் கிடைத்ததாகவும், அடுத்த வாரத்திற்குள் அதைப் பற்றிய உறுதியான தகவல்களை வழங்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|