கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 835ஆக உயர்வு – 240 பேர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைச்சு!
        
                    Saturday, May 9th, 2020
            
நேற்றையதினம் இனங்காணப்பட்ட 11 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 835ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தொடர்ந்தும் கொரோனாவுக்காக 575 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்றும் சுகாததார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை கொழும்பில் 150 பேரும், களுத்துறையில் 32 பேரும், கம்பஹாவில் 36 பேரும், புத்தளத்தில் 35 பேரும் யாழ்;பபாணத்தில் 17 பேரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 9 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

