”பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு” விண்ணப்பம் கோரல்!

Friday, May 21st, 2021

”பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு” விண்ணப்பங்கள் மே மாதம் 22 ஆம் திகதி வரை கோரப்படுகின்றன.

கொழும்பு, இலங்கை:  இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமை வலு முதன்மையாளன் (Green Energy Champion) 2021 திட்டமானது இலங்கையில் நிலையான இயக்கம், வலுத் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் பசுமை வலு முதன்மையாளன்களின் அடுத்த தொகுப்பைக் கண்டறிய ஒரு சிறந்த துவக்கத்தில் உள்ளது.

அனைத்து வலுப் புத்தாக்குநர்களுக்கும் ஒரு அழைப்பு ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பரப்பப்பட்டதுடன்  இலங்கையில் வலுத் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான மற்றும் புத்தாக்கமிகுந்த தயாரிப்புகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ள நாட்டிலுள்ள அனைத்து தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கும் (SME) மே 22 ஆம் திகதி வரை இவ்வழைப்பானது திறந்திருக்கும்.

பசுமை வலு முதன்மையாளன் திட்டமானது, இலங்கையில் பசுமை வலுத் தீர்வுகளை கண்டுபிடித்து செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், குறிப்பாக பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்குச் சேவை செய்வதற்காக 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் மூன்று பதிப்புகள் தனிப்பட்ட வீடுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதல் நகராட்சிகள், பொது அதிகாரசபைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் வரையிலான பங்கேற்பாளர்களுடன்  சிறந்த வரவேற்பைக் கண்டன. பல ஆண்டுகளாக அச்சு மற்றும் இணையத்தள ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், வலுத் திறன் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்துவதிலும் பசுமை வலு முதன்மையாளன் (GEC) பிரசாரம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

பசுமை வலு முதன்மையாளன் திட்டத்தினை ஜேர்மனிய மத்திய வெளியுறவு அலுவலகம் சார்பாக இலங்கை மின்சக்தி அமைச்சு – சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சுடன் இணைந்து Deutsche Gesellschaft fஜr Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆனது செயல்படுத்துகின்றது.

சூரிய, உயிரி மற்றும் நீர் வலுக்களைக் கொண்டு   ஆற்றல்களை திறம்பட மேம்படுத்துவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க வலுவானது எதிர்காலத்திற்கான வலுவின் அடிப்படையாக அமையும் பகிரப்பட்ட தொலைநோக்குகளை நிறுவும் பல வெற்றிகரமான முன்னெடுப்புக்களை கடந்த போட்டிகள்  பல ஆண்டுகளாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.   முன்னர் வெற்றியடைந்த விண்ணப்பதாரர்கள் நாட்டில் நிலையான வலுவுக்கான சிறந்த நடைமுறை மாதிரிகளைக் காண்பிப்பதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அதே நேரத்தில் எதிர்காலத்தில் இதே போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு வழி வகுத்தன.

இந்த ஆண்டு, பசுமை வலு முதன்மையாளன் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மேம்பட்ட வணிக ஊக்குவிப்பு நிகழ்ச்சிக்கு பிரத்தியேக அணுகலைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது – பசுமை வலு முதன்மையாளன்  ஊக்குவிப்புத் திட்டம் 2021, ஹட்ச் (Hatch)  மற்றும் குட் லைஃப் எக்ஸ் (Good Life X) ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டது – இது அவர்களை பசுமை வலுச் சுற்றுச்சூழல் திட்டத்தில் உற்சாகமிக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச  பங்காண்மைகளுக்குத் தயார்படுத்தும் அதேவேளை, அவர்களது  வணிக யோசனைகளை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் உதவும். ஆறு மாத கால ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து முக்கிய பசுமை வலுப் பங்குதாரர்களிடையே வலையமைப்பு வசதியை நோக்கமாகக் கொண்ட முறையான பங்காளர் இணைப்பு நிகழ்வு நடைபெறும். பசுமை வலு முன்னோடித் திட்டமானது 1.5 மில்லியன் ரூபா வரையிலான தயாரிப்பு அபிவிருத்தி உதவியையும் வழங்குகின்றது.

பசுமை வலு முதன்மையாளன் 2021 இன் இறுதிக் கட்டம் ஒரு அறிமுக தினம்  (Demo Day) மூலம் குறிக்கப்படும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், பயிற்சி மற்றும் வலையமைப்பாக்கல் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் புதுப்பிக்கப்பட்ட யோசனைகளையும் தீர்வுகளையும் காண்பிப்பார்கள்.

நீங்கள் வலுச்சக்தி நிலைத்தன்மை வணிகத்தில் ஈடுபட்டிருப்பின், பசுமை வலு முதன்மையாளன் விருது உங்களுக்குரியது என்பதில் சந்தேகமில்லை! உங்கள் வணிகத்தை நிறுவுவதற்கும் வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பானது வணிக மற்றும் சந்தை நுண்ணறிவுடன் தீவிரமாக உங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை சாத்தியமான வாய்ப்புகளை அடையாளம் காணவும், சீரான சந்தை நுழைவுக்கான கணக்கிடப்பட்ட அபாயங்களுக்கு முகங்கொடுக்கவும் உங்களுக்கு உதவும். மேலும், இது முக்கிய அரசியல் பங்குதாரர்களிடையே தெரிநிலையை வழங்கும் அதேவேளை எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகிறது.

எனவே, உங்களுக்கும் உங்களது வணிகத்திற்கும் வழங்கப்படும் சந்தேகத்திற்கிடமின்றிய  மகத்தான வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது அது தொடர்பான  மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு www.greenenergychampion.lk எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்!

Related posts: