சர்வதேச நீதவான்கள் விசாரணை செய்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் – பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா!

Thursday, September 29th, 2016

சர்வதேச நீதவான்களைக் கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்தினால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பின் ஊடாக சமஸ்டி முறைமை ஏற்படுத்தப்பட்டாலோ அல்லது சர்வதேச நீதவான்கள் தருவிக்கப்பட்டாலோ நான் அரசியலிலிருந்து விலகிக்கொள்வேன். இது தொடர்பில் எனக்கு உறுதியளிக்க முடியும்.அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் என யாரேனும் கூறினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தத் தயார்.

சர்வதேச நீதவான்கள் நாட்டுக்குள் வருவார்கள், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும், அரசியல் அமைப்பு சமஸ்டியாக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி நாட்டுக்குள் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றது. இந்த பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ajith-perera-200-news

Related posts: